மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

Siva

திங்கள், 25 நவம்பர் 2024 (15:58 IST)
சிஎஸ்கே அணிக்கு ஏற்கனவே அஸ்வின் திரும்பியதால் பந்துவீச்சில் பலமான அணியாக மாறி உள்ள நிலையில், தற்போது ஆல் ரவுண்டர் என்று கூறப்படும் ‘சுட்டி குழந்தை சாம் கரன், சென்னை அணிக்கு திரும்பி உள்ளார். அவரை சிஎஸ்கே அணி ரூ.2.4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

கடந்த 4 வருடங்களுக்கு முன், சாம்கரன் சிஎஸ்கே அணியில் இருந்தார். அதேபோல், தோனியின் வழிநடத்தல் படி அவர் அபாரமாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 4 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது மீண்டும் சிஎஸ்கே அணிக்கு இங்கிலாந்து வீரர் சாம்கரன் திரும்பி உள்ளார். பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த அவரை, சிஎஸ்கே அணி ரூ.2.4  கோடிக்கு ஏலம் எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்த டாரல் மிட்சல் என்பவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன. கடந்த சீசனில், பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த டூ பிளஸ்சிஸ் வீரரை ரூபாய் 2 கோடிக்கு டெல்லி ஏலம் எடுத்து உள்ளது.

சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்த  ஷர்துல் தாக்கூரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை என்றும் அதேபோல், சிஎஸ்கே முன்னாள் வீரர் ரஹானாவையும் எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து வீரர் க்ளென் பிலிப்ஸை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை என்றும், கேன் வில்லியம்ஸ்ஸையும் வாங்க எந்த அணியும் முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்