சர்தேசாய்: ”பிரபலம் அடைந்துள்ள நீங்கள், எப்போது வாழ்க்கையில் செட்டில் ஆகிப் போகிறீர்கள்?. துபாயில் குடியேறுவீர்களா?. அல்லது வேறு எந்த நாட்டில் குடியேறுவீர்கள்?. உங்களுடைய தாய்மைப்பேறு பற்றி. உங்களுடைய குடும்பம் பற்றி, நான் உங்களுடைய சுயசரிதை புத்தகத்தில் பார்க்கவில்லை. இதை பார்க்கும்போது நீங்கள் குடியேறுவதற்கு முன்பு வரை ஓய்வு என்பதை நீங்கள் விரும்பவில்லை என்பது போல் இருக்கிறது
சானியா: நான் தாய்மை அடைவதை தேர்வு செய்யாமல், உலகத் தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையாக இருப்பது உங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது போல் தெரிகிறது. நான் ஒரு பெண்மணியாக எல்லா நேரத்திலும் இந்த கேள்வியை சந்தித்திருக்கிறேன். அனைத்து பெண்களும் இதை சந்திக்கிறார்கள். முதலில் திருமணம், இரண்டாவது தாய்மைபேறு பற்றி கேள்வி கேட்கிறார்கள். இது மட்டும்தான் விஷயமா? விம்பிள்டன் வெற்றி, நம்பர் ஒன் ஆகி செட்டில் ஆனதெல்லாம் விஷயம் இல்லை என்று கூறுவது துரதிருஷ்டவசமானது. ஆனால், குடும்ப வாழ்வில் செட்டில் ஆவது இறுதியில் நடக்கும், இப்போது அல்ல. அது நடக்கும்போது, அனைவரிடமும் முதலில் கூறுவேன்.