20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக வீரர் இல்லாத உலகக் கோப்பை அணி!

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2023 (07:49 IST)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் தற்போது உலகக்கோப்பைகான இந்திய அணி வீரர்கள் குழுவை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்துள்ளது.

இந்த முறை உலகக் கோப்பை அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம்பெறவில்லை.  கடைசியாக 2003  ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் தமிழக வீரர்கள் யாரும் இடம்பெற்றிருக்கவில்லை.

அதன் பிறகு நடந்த 2007, 2011, 2015 மற்றும் 2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிகளில் தமிழக வீரர் ஒருவராவது இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய உலகக் கோப்பை அணியில் தமிழக வீரர் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்