ஆனால்,சூரியனின் பிராண தேவதையாக இருப்பவர் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர்! அனைத்து குலதெய்வங்களுக்கு அருளாற்றலை நொடி தோறும் வழங்கிக் கொண்டிருப்பவரும் இவரே. பழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் மற்றும் ஏராளமான குறுநில மன்னர்களும் தமது பொக்கிஷ அறையில் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரை ஸ்தாபித்து, வழிபட்டு வந்துள்ளனர்.
இந்த வழிபாடு அவ்வளவு ரகசியமாக செய்து,வளமோடும், வலிமையோடும், சகல சம்பத்துக்களோடும் வாழ்ந்து வந்துள்ளனர்;
இந்த வழிபாட்டைப் பின்பற்றுபவர்கள் ஒரு போதும் அசைவம் சாப்பிடக்கூடாது. ஆண்கள் எனில், மதுப்பழக்கம் அறவே இருக்கக்கூடாது. எவ்வளவுக்கெவ்வளவு ரகசியமாக இந்த வழிபாட்டைச் செய்து வருகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு விரைவான பலன்கள் நமக்குக் கிட்டும்.