சிவன் கோவில் வாசலில் நந்தி சிலை இருக்கும். அந்த சிலை சிவனை நோக்கி இருக்கும். நந்தியின் நான்கு கால்களும் நான்கு வகையான குணத்தை வெளிப்படுத்துவதாக ஐதீகம். அதாவது, சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் ஆகிய நான்கு.
சிவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார். நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது.