பச்சரிசி மாவையும், வெள்ளை சர்க்கரை, ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்களையும் சேர்த்து சிறிது நெய் விட்டு மாவாக பிசைந்து அதை வாழை இலையின் நடுவே விளக்கு போல் அமைத்து, அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, தெய்வ சன்னதியில் முக்கியமாக அம்மன் சன்னதியில் வைத்து வழிபாடு செய்தல் மாவிளக்கு போடுதல் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பத்திலும், குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வருடத்துக்கு ஒருமுறை குலதெய்வம் கோயிலுக்கு சென்று அங்கு உரலில் பச்சரிசி மாவு இடித்து, தீபம் ஏற்றினால் குடும்பம் மென்மேலும் செழிக்கும் என்று நம்பப்படுகிறது.