இதில் பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தை முன் கத்தரி என்றும் ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம்வரை சஞ்சரிக்கும் காலத்தைப் பின்கத்தரி என்றும் சொல்கிறோம். நடுவில் இருக்கும் கிருத்திகை நட்சத்திர காலமே கத்தரி வெயிலின் மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் நாள்களாகும். இந்த ஆண்டு மே 4-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதிவரை அக்னி நட்சத்திர தினங்களாகும்.