யாருக்கெல்லாம் கால சர்ப்ப தோஷம் ஏற்படும்...?

முன் ஜென்மத்தில் வாழ்ந்த போது பாம்பிற்கோ அல்லது பிற விலங்கினங்களுக்கோ நீங்கள் கேடு விளைவித்திருந்தால் உங்களுக்கோ அல்லது உங்களது சந்ததியினருக்கோ நாக சர்ப்ப தோஷம் ஏற்படும். 

இரண்டு பாம்புகள் இணைந்திருக்கும் போது அவற்றைக் கொல்ல முயலும்போது  ஒன்றை மட்டும் கொன்றால் மற்றது தப்பித்துவிட்டால் அது மிகக்கொடூரமான பாவமாகும்.
 
இந்தப் பாவம் செய்தவர்கள்தான் மறுபிறவியில் லக்னத்தில் ராகு அல்லது கேது தனித்திருக்கப் பிறக்கின்றனர். அப்படி அடிக்கும்போது அது உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன் என்னை விட்டுவிடுங்கள் என்பதைப்போல தனது வாலால் மூன்றுமுறை தரையில் அடித்துச் சத்தியம்  செய்யும். அப்போது அதை உயிரோடு விட்டுவிட்டால் நீங்கள் சர்ப்ப தோஷத்திலிருந்து தப்பித்தீர்கள். இல்லாவிட்டால், அது உங்களின்  அடிதாங்காமல் உயிர்விட்டால், சாபம் தந்துவிட்டு இறக்கும்.
 
காலனான ராகுவுக்கும், சர்ப்பமான கேதுவுக்கும் இடையில் கிரகங்கள் இருப்பது கால சர்ப்ப தோஷம் எனப்படும். கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இருபாம்புக்களுக்கிடையே மற்ற ஏழு கிரகங்களும் அடைபட்டு இருப்பதாகும்.


 
இது ஜாதகத்தில் உள்ள நல்ல யோகங்களை நசுக்கி கெடு பலன்களை தரும் என்று ஐதீகம். ராகு, கேது இருவரும் விஷம் உள்ள பாம்புகள். இவர்களுக்கு இடையே சிக்கி முன்னும் பின்னும் இவர்களின் விஷத்தால் தாக்கப்படுவதால கிரகங்கள் செயல் இழக்கின்றன என்பது கருத்து.
 
ராகுவிற்கு பாம்பின் உடல் குணத்தால் வாலில் விஷம், கேதுவிற்கு பாம்பின் தலையானதால் தலையில் விஷம். இந்த அடிப்படையில் கால  சர்ப்ப தோஷம் அமைகிறது.
 
ஒருவரின் ஜாதகத்தில் உள்ள லக்னத்தில் தொடங்கி, ஏழு வீடுகளுக்குள் தோஷம் உள்ளவர்களுக்கு வாழ்வின் முற்பகுதியும், ஏழாம் வீட்டில் தொடங்கி, லக்னத்தில் முடிபவர்களுக்கு வாழ்க்கையின் பிற்பகுதியும் சிக்கலாக இருக்கும்.
 
சர்ப்ப தோஷம் என்பது திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கை ஆகியவற்றில் தடைகள் ஏற்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்