பலர் ஸ்ரீ மகாலட்சுமியின் திரு உருவ படத்தினை வீட்டு வாசலின் வெளிப்பகுதியை பார்ப்பது போல் வைத்திருப்பார்கள், இவ்வாறு வைப்பது மிகவும் தவறான முறையாகும். மஹாலட்சுமியின் திரு உருவ படத்தினை எப்பொழுதும் வீட்டின் உள்பகுதியை பார்ப்பது போல்தான் வைக்க வேண்டும்.
வீட்டினுள் பூஜை அறை மற்றும் சமையல் அறை இவை இரண்டும் எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறையில் ஏதாவது நறுமணம் வீசிக்கொண்டே இருக்க வேண்டும். அதே போல் வெள்ளி, செவ்வாய் போன்ற கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி, ஊதுபத்தி அல்லது சாம்பூராணி போட்டு இறைவனை வழிபட வேண்டும்.
குபேரனுக்கு மிகவும் பிடித்த உணவு பொருள் ஊறுகாய், எனவே வீட்டின் சமையலறையில் உப்பு, ஊறுகாய் மற்றும் மஞ்சள் நிறைந்திருக்க வேண்டும். இதன் மூலம் நம் வீட்டில் மஹாலட்சுமி குடி இருப்பாள்.