எந்த கடவுளுக்கு எந்த வகையான உணவுகள் மிகவும் பிடிக்கும்....?

Webdunia
விஷ்ணு: விஷ்ணுவுக்குப் பிடித்த உணவு என்று தனியாக எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால், மஞ்சள் நிறத்தில் இருக்கும் நைவேத்திய உணவென்றால் மகாவிஷ்ணுவுக்கு இஷ்டம் என்பது ஐதீகம். மஞ்சள் நிற சர்க்கரைப் பொங்கல், லட்டு.
கண்ணன்: கிருஷ்ணாவதாரக் கண்ணனுக்கு வெண்ணெய்யும், அவலும் என்றால் ப்ரியம் என்று சொல்கிறது குசேலர் கதை.
 
சரஸ்வதி: கல்விக்கு அதிபதியான சாரதாம்பிகைக்கு வெண்பொங்கல் என்றால் ப்ரியம். 
 
சிவன்: பாலில் குங்குமப்பூ சேர்த்துப் படைத்தால் எம்பெருமானின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.
 
கணபதி: பிள்ளையாருக்கு லட்டும், மோதகமும் (கொழுக்கட்டை) அத்தனை பிடிக்கும். 
 
முருகன்: குமரக் கடவுளுக்கு மாம்பழங்களும், வாழைப்பழங்களும் ரொம்ப இஷ்டம் என்கிறார்கள் சிலர். பொதுவாகப் பழங்களும் வெல்லமும் என்று எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், தமிழ்நாட்டில் பழனி முருகனுக்குப் பஞ்சாமிர்தம் செய்து படைக்கிறார்கள்.
 
மகாலஷ்மி: செல்வத்துக்கு அதிபதியான மகாலஷ்மிக்கு அரிசிப் பாயசம் என்றால் இஷ்டம். பாயசம் மட்டுமல்ல அரிசியில் தயாரிக்கப்படும்  அனைத்து இனிப்பு வகைகளும் அவளுக்கு இஷ்டமே!
 
துர்கை: துர்கைக்கும் பாயசமும் காய்கறி உணவும் ரொம்பப் பிடிக்கும்.
 
ஐயப்பன்: மணிகண்டனான ஹரிஹரனுக்கு அரவணப் பாயசம் என்றால் இஷ்டம்.
 
ஹனுமன்: சிவப்பு நிறத் துவரம் பருப்புடன் வெல்லம் சேர்த்துச் செய்கிற பண்டங்கள் ஹனுமனுக்கு ரொம்ப இஷ்டம்.
 
அம்மன்: மாரியம்மன், பாளையத்தம்மன், கெளமாரியம்மன், கருமாரியம்மன், காளியம்மன் என தமிழகத்து அத்தனை அம்மன்களுக்கும் ஆடிக்கூழ் அத்தனை இஷ்டம் என்று நம் எல்லோருக்குமே தெரியும்.
 
சனி, ராகு, கேது: மூவருமே அரைத் தெய்வ, அரை அசுர ரூபங்கள் என்பதால் இவர்களுக்கு கருப்பு நிற உணவுப் பொருட்களான கடுகு, கருப்பு  எள்ளில் செய்த உணவுகள் ரொம்பப் பிடிக்குமாம்.
 
குபேரன்: சாட்ஷாத் அந்த திருமலை வெங்கடேஷன் பெருமாளுக்கே கடன் கொடுத்து உதவும் அளவுக்கு செல்வாக்கு மிக்க தனவந்தக் கடவுளான குபேரனின் அருள் பெற வேண்டுமெனில் லட்டு மற்றும் சீதாப்பழ பாயசம் படைத்து அவனை வணங்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்