ஆனந்தமய கோசம்: மேற்கண்ட நான்கு அடுக்குகளுக்கும் அப்பாற்பட்டு இருக்கும் ஒரு நிலையே, ஆனந்தமய கோசம் ஆகும். மற்ற நான்கு கோசங்களையும், நாம் உணரவோ, அறியவோ முடியும். ஆனால் ஆனந்தமய கோசம் என்பது நம்முடைய புலன் அறிவுக்கு அப்பாற்பட்டது. இந்த நிலையை உணர்வதும், அடைவதும்தான் ஆன்மிகத்தின் லட்சியமாகும்.