குண்டலனி எனப்படும் மூலாதார சத்தி, மூலாதார சக்கரமாகிய குதஸ்தானத்தில் நாகப்பாம்பு போன்று, ஆனால் அரூப வடிவில் மண்டலமிட்டுள்ளது.
சித்தர்கள் தியானம், பிராணயாமம் மூலம் மனதை உறங்க செய்து குண்டலனியை விழித்து எழ வைப்பார்கள். அந்த தியானத்தின்போது குண்டலனி சக்தி ஒவ்வொரு ஆதார சக்கரத்தையும் கடந்து மேல் நோக்கி எழும்போது பற்பல உணர்வுகள் உண்டாகும். அவை சமாதி நிலைகள் எனப்படும்.
சம்ம + ஆதி = சமாதி. அதாவது ஆதி பரம்பொருளான பரபிரம்மதிற்கு இணையாக, ஜீவாத்மா - பரமாத்மா என்ற பேதமின்றி சமமாவது என்று பொருள். ஆனால் சமாதி என்ற சொல் இன்று இறந்த மனிதர்களுக்கு கட்டும் கல்லறை என்ற பொருளிலே பயன்படுத்தப்படுகிறது.