வீட்டில் சந்தோஷம், நோய் இல்லாத வாழ்க்கை, சாப்பாடு, பணம் எதுவாக இருந்தாலும் அதில் லட்சுமி உறைந்து இருப்பாள். பூஜை அறையில் எப்போதும் ஒற்றை விளக்கை ஏற்றாமல் இரண்டு விளக்கை ஏற்றுவதால் அதிர்ஷ்டமும், நோய் இல்லா வாழ்வும் அமையும்.
பூஜையறையில் தினமும் காலை, மாலை இரு வேளையும் தவறாது எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம்.
விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும். வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.
எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது. மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.