தெய்வங்களுக்கு இந்த பொருட்களில் அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்.....!!
அபிஷேகம் இறையருளைப் பரிபூரணமாகப் பெற்றுத் தரும். அபிஷேக தெய்வ மூர்த்தங்களிலிருந்து அளவிட முடியாத ஆற்றல் வெளிப்படும். அபிஷேகத்தின்போது ‘ஓம்’ என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் தெய்வ விக்கிரகங்களை அடைந்து மீண்டும் பகதர்களிடம் சேர்கிறது.
மஞ்சள் பொடி: மஞ்சள் பொடியில் அபிஷேகம் செய்தால் ராஜ வசியம் கிடைக்கும். அதாவது அரசாங்க அனுகூலம் கிடைக்கும்.
திரு மஞ்சன பொடி: திரு மஞ்சன பொடியில் அபிஷேகம் செய்தால் கிரக தோஷம் நீங்கும்.
அரிசி மாவு: அரிசி மாவில் அபிஷேகம் செய்தால் கடன் பிரச்சனை விலகும்.
சந்தனாதி தைலம்: வயிறு வலி பிரச்சனையில் அவதிப்படுபவர்கள், சந்தனாதி தைலம் அபிஷேகம் பண்ணுவது நல்லது. ஏனென்றால் சந்தனாதி தைலம் அபிஷேகம் செய்தால் வயிறு உபாதை நீங்கும்.
பஞ்சாமிர்தம்: பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்தால் செல்வம் செழித்தோங்கும்.
தேன்: தேனில் அபிஷேகம் செய்தால் நல்ல சரீரம் கிடைகும். மேலும் குரல் வளம் பெருகும்.