திருஷ்டியை கழிக்க உதவும் விளக்கு திரி; எப்படி தெரியுமா...?

Webdunia
தினமும் நம் வீட்டில் விளக்கேற்றும் திரியை விளக்கு எரிந்து முடிந்ததும் தூக்கி போடாமல், திரி கருகும் முன், எண்ணெய் காலியாகும் முன் மலர்களால் நெருப்பினை அணைத்து விடுவது தான் நல்லது. 

விளக்கை வாயால் ஊதக்கூடாது. ஒற்றை திரியாக போடக் கூடாது. எப்போதும் இரண்டு திரிகளை இணைத்து தான் போட வேண்டும். மீண்டும் மறுநாள்  விளக்கேற்றும் பொழுது புது திரியில் ஏற்றவும்.
 
இந்த திரிகளை குப்பையில் கட்டாயம் வீசக்கூடாது. திரியை குப்பையில் போட்டால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியே சென்று விடுவாள்.
 
நம் ஜாதகத்தில் நமக்கு நல்ல நேரம் இருந்தாலும் நம் வீட்டில் நல்லது நடக்கவில்லை என்றால், நீங்கள் செய்யும் இந்த ஒரு சில விஷயங்களும் காரணமாக இருக்கும் என்பதை மறக்காதீர்கள். 
 
தினமும் மாற்றும்   திரிகளை சேர்த்து வைக்கவேண்டும். கொஞ்சம் திரிகள் சேர்ந்ததும் வீட்டில் இருக்கும் அனைவரையும் கிழக்கு முகமாக பார்த்து உட்கார  வையுங்கள். இதனை இரவு சாப்பிட்டு முடித்த பின்னர் தூங்க செல்லும் முன் செய்வது நல்லது. அந்த திரிகளை தூப காலில் போட்டு, அனைவரையும் சேர்த்து  வலமிருந்து இடமாக மும்முறை மற்றும் இடமிருந்து வலமாக மும்முறை திருஷ்டி கழிக்கலாம்.
 
திருஷ்டி கழித்து முடிந்ததும் வீட்டு வாசலில் வைத்து அதனை கொளுத்தி விடுங்கள். முழுக்க எரிந்து முடிந்ததும், வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் இந்த நெருப்பில் பஸ்பமாகிவிடும். உங்களை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் எல்லாம் இந்த தீயில் எரிந்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்