இந்த பிறையை தரிசனம் செய்து வந்தால், நம் பாவங்களைப் போக்கி ஆயுளும், ஆரோக்கியமும் நீடிக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.
மூன்றாம் பிறை தரிசனம் செய்வதற்கு முன் ஒருவருக்காவது உணவை தானம் செய்யலாம். நோய் நொடியில்லாமல் செல்வ செழிப்புடன் வாழ மாலை வேளையில், விளக்கேற்றியவுடன் வாசலில் மாக்கோலம் போட்டு, கோலத்தின் நடுவில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பிய தாம்பூலத்தட்டில் காமாட்சி விளக்கை மேற்கு திசை நோக்கி ஏற்ற வேண்டும்.
மாணவர்களுக்கு ஞாபக சக்தியும், பெரியவர்களுக்கு ஆரோக்கியமும், ஆயுளும் கிடைக்கும். தம்பதியருக்கு ஆதர்ஷ தம்பதியாக திகழும் வாய்ப்பும் குடும்பத்துடன் வழிபடும் போது ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நீடிக்கும் என்பது ஐதிகம்.