கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் பண்டைய வரலாறு வாய்ந்த கரூர் மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி நிகழ்ச்சியினை முன்னிட்டு, ஆலய வளாகத்தில், உற்சவர் மாரியம்மன், வஞ்சியம்மன், வலங்கியம்மன் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டதோடு, உற்சவர் மாரியம்மன் விஷ்ணு துர்க்கை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் பலவித வண்ண மலர்களினாலும், பல்வேறு விஷேச தீபாரதனைகள் காட்டப்பட்டது. கற்பூர ஆரத்தி, கோபுர ஆரத்தி ஆகிய ஆரத்திகளுடன், சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.