ருத்ராட்சை அணிவதால் பல வகையான நோய்கள் குணமடைந்து ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றலை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத் தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு.
கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோத்திரம். சனியை இரண்டு பக்கத்திலும் வைக்கலாம்.
செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன்றும் சைவக் கிரகங்கள், சைவக் கடவுள்கள் ஆகும். செவ்வாய் - முருகன், குரு - தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள். இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம் அணிந்தால் பிரம்மாண்டமாக முன்னுக்கு வருவார்கள்.