இறைவனின் கருணையால் தன்முற்பிறவியினை அறிந்த மகாபலி தன் ஆட்சிகாலத்தில் கார்த்திகை தீப விழாவை சிறப்பாக கொண்டடி வந்ததன் பின்னர் அவன் இறைவனின் திருவடியைச் சேரும் காலத்தில், இறைவனை நோக்கி ‘மக்கள் அனைவரும் இக்கார்த்திகை பௌர்ணமியன்று தீபமேற்றி வழிபட்டு நன்மை அடைய வேண்டும்’ என்று வேண்டினான். அவ்வாறே ஈசனும் வரமளிக்க இன்றும் மக்கள் அனைவரும் இல்லந்தோறும் தீபமேற்றி வழிபடுகிறோம்.