ஆனால் 14-ஆம் தேதி முதல் சுக்ரன் 6-ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள் வந்துச் செல்லும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சனியும், ராகுவும் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகை கைக்கு வரும். வழக்கால் பணம் வர வாய்ப்பிருக்கிறது. வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமொழிக்காரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். அடிப்படை வசதி, வாய்ப்புகள் கொஞ்சம் உயரும். உறவினர், நண்பர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். 16-ஆம் தேதி வரை சூரியன் 4-ம் வீட்டில் இருப்பதால் வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். பழைய வீட்டை இடித்துக் கட்டுவது அல்லது வீட்டில் கூடுதலாக ஒரு தளம், அறை அமைப்பது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும்.
கன்னிப் பெண்களே! வேலைக் கிடைக்கும். உயர்கல்வியில் முன்னேறுவீர்கள். நல்ல வரன் அமைய வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். கல்வித் தகுதியில் சிறந்த, நல்ல அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதற்கான பாராட்டும் உங்களுக்குக் கிடைக்கும். கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கையாலும், தளராத உழைப்பாலும் வெற்றி பெறும் மாதமிது.