பால ஆஞ்சநேயர், சஞ்சீவிராய ஆஞ்சநேயர், ராமபக்த ஆஞ்சநேயர், தியான ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் பல. ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்வதுண்டு.
வழிபாடு செய்யும் காலத்தில் ராம நாமத்தினை நாம் சொல்ல வேண்டும். நமது அனைத்து விதமான கோரிக்கைகளையும் அவரிடம் வைத்து வணங்க வேண்டும். கோரிக்கைகள் ஏதுமில்லாமல் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யக்கூடாது. ராமனை துதிக்கும் மக்களின் துதியை கேட்பதற்காகவே ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக வாழ்ந்து மக்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.