தொட்ட சிணுங்கி, முடக்கத்தான், துளசி, வில்வம், கற்றாழை போன்ற செடிகள் வீட்டில் வளர்த்தால் கண் படுத்தல், ஏவல், சூன்யம், எதிர் வினைகள் போன்ற தீய சக்திகள் எளிதில் வீட்டிற்குள் வராது.
வீட்டில் விக்ரங்களை வைத்து வழிபாடு செய்பவர்கள் கறவை பசும் பால், தேங்காய் நீர், அரைத்த சந்தானம் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
வெள்ளை மிளகு, கடுகு, காய்ந்த வில்வ இலைகள், நாய் கடுகு, பால் சாம்பிராணி, கடுக்காய், காய்ந்த வேப்ப இலைகள், ஓமம், தான்றி காய், காய்ந்த மருதாணி இலை, மஞ்சள் இவைகளை நன்றாக கலந்து அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிகிழமை போன்ற நாட்களில் தூபம் போடுவது சகல நன்மைகளை தரும். குல சாமிகளின் ஆசிகள் கிடைக்கும்.