பெற்றோர்களிடம் பாசமாக இருக்கும் குழந்தைகள் கூட, பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் போகலாம், கவலை படாதே!
உன் சொத்தை தான் மட்டுமே அனுபவிக்க வேண்டுமென நினைத்து, நீ சீக்கிரம் இறக்க வேண்டுமென, நினைக்கலாம். பொறுமையாக இரு.
உன்னிடம் இருக்கும் போதே உன் குழந்தைகளுக்கு கொடுத்து விடு. நிலையை அறிந்து கொண்டு, அளவோடு மட்டுமே கொடு. அவசரப்பட்டு எல்லாவற்றையும் கொடுத்து விட்டு, பின் அவர்களிடம் கை ஏந்தாதே.
அடுத்த குடும்பத்தின் நல்ல நிலையைக் கண்டு, பொறாமை படாதே! மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ கற்றுக் கொள்.