பகவான் என்று அழைக்ககூடிய சர்வேஷ்வரர் பெண் வேடமிட்டு கையில் ஆயுதத்துடன் நடனமாடிக்கொண்டே கடம்பர்கோவிலை சுற்றிவந்து சபாபதிநாடார் தெருவில் உள்ள அவருடைய சக்ரபீடம் சென்றடைவார் அவருடன் வந்த விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் ஒவ்வொருவரும் பழங்கள், தானியங்கள், தென்னங்குறுத்து, நெற்பயிர் ஆகியவகளை எடுத்துகொண்டு அவர் பீடம் நோக்கி சென்றனர். இரவில் மயிலாட்டம், ஒயிலாட்டம் நடைபெறும். பிறகு பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவார் என அவ்விழா குழுவினர் தெரிவித்தனர்.