முதலாவதாக, சனிபகவானை சூரிய உதயத்திற்கு முன்போ அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு பின்போ வணங்குவது நலம். தனது தந்தையான சூரிய பகவனானுடன் சனி பகவானுக்கு பிணக்கு இருப்பதால் சூரியன் இருக்கும் போது சனி பகவானை வணங்குவதை தவிர்ப்பது நல்லது.
கோவில்களில் சனி பகவானை தரிசிக்கும் போது ஓரமாக நின்றோ அல்லது அவரின் திருபாதத்தை பார்த்தோ அவரை வணங்க வேண்டும். ஒருபோதும், சனிபகவானிடம் தவறான சத்தியங்களை செய்ய வேண்டாம் மற்றும் மனித குலத்திற்கு தீமை விளைவிக்கும் எதையும் வேண்டக் கூடாது.
இவ்வாறான தவறான கர்ம வினைகளை எவரும் மன்னிக்க மாட்டார்கள். குறிப்பாக சனி பகவான் மன்னிக்காதது மட்டுமின்றி தண்டித்தே விடுவார் என்பது நம்பிக்கை. ஆனால் வீடுகளில் அவருடைய திருவுருவத்தை மனதில் இருத்தி, அவருக்குரிய மந்திரங்களை சொல்லி பூஜை செய்யலாம்.