சூரியனார் கோவிலில் வெள்ளெருக்கு முக்கியத்துவம் தரக் காரணம் என்ன..?

வெள்ளெருக்கு செடியானது அதிகமான உயிர் சக்தி கொண்டது. என்வே அதனை பார்த்தவுடன் எடுக்காமல் சில பரிகார முறைகளை பின்பற்றி எடுக்கலாம். அப்போதுதான் சிறப்பான பலனை தரும்.
சூரியனுக்குரிய மூலிகையாக கருதப்படும் வெள்ளெருக்கு, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது. ஏழாவது நாளான  சப்தமி திதி, ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் போன்றவை சூரியனுக்கு உரியது. அதுபோல ஏழு வித நரம்பு களால் ஆனது வெள்ளெருக்கு ஆகும். 
 
ஒவ்வொரு நாளும் சூரிய பகவான், வெள்ளெருக்கு விநாயகரை வணங்கி, தமது பணியை தொடங்குவதால் சூரியனார் கோவிலில் வெள்ளெருக்கு முக்கியத்துவம் பெறுகிறது. ரத சப்தமி நாளன்று சூரியனின் தலையில் ஒன்பது வெள்ளெருக்கு இலைகளை வைத்து, அவற்றில் தானியங்கள், முக்கனிகள், புஷ்பங்கள்  ஆகியவற்றை வைத்து, அவரது பூவுலக கடமைகளை ஆற்றி வரும்படி ஈஸ்வரனால் அனுக்கிரகம் செய்யப்பட்டது. எனவே ரத சப்தமி அன்று வெள்ளெருக்கால்  செய்யப்பட்ட விநாயகரை பூஜிப்பது சிறப்பாகும்.
வெள்ளெருக்கு செடியிலிருந்து கிடைக்கும் பட்டை மூலம் திரி செய்து விளக்கில் தீபம் ஏற்றி வந்தால் எல்லா விதமான எதிர்மறைகளும் விலகி விடும் என்பது  நம்பிக்கை. எருக்கம்பூ, அருகம்புல், வன்னி இலை, அத்தர், ஜவ்வாது, புணுகு போன்ற வாசனைப் பொருட்களை பூசியும் இறைவனை வழிபடலாம். இதை செய்வதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும், மன அமைதியும் உண்டாகும்.
 
சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமானது இந்த எருக்கம்பூதான் என்று நாயன்மார்கள் சிலர் கூறியிருக்கிறார்கள். மேலும் வெள்ளெருக்கை தேவ மூலிகை என்றும் ஒரு சிலர் கூறுவார்கள். வெள்ளெருக்கு விநாயகர் சிலை செய்ய வெள்ளை நிற பூக்கள் கொண்ட எருக்கன் செடியை தான் தேர்வு செய்வார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்