வீட்டிலேயே சஷ்டி விரதத்தை கடைபிடிப்பது எப்படி...?

சனி, 8 ஜனவரி 2022 (10:20 IST)
அமாவாசையை அடுத்துவரும் சஷ்டியைச் சுக்கில பட்ச சஷ்டி (அ) வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்தவரும் சஷ்டி கிருஷ்ண பட்ச சஷ்டி (அ) தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது. 

நதிகளில் புனிதமானது கங்கை. மலர்களில் சிறந்தது தாமரை. விரதங்களில் சிறப்புமிக்கது கந்தசஷ்டி விரதம் ஆகும். வீட்டிலேயே சஷ்டி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வரலாம்.
 
பிறகு பூஜையறையில் முருகன் படத்தின் முன்பு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றவேண்டும்.
 
முருகனுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர் மாலை சாற்றி அலங்காரம் செய்து வழிபடலாம். அவருக்கு இஷ்ட நைவேத்தியமான அவல் உணவுகளை படைக்கலாம். இவ்விரதத்தை முழு நேரமும் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.
 
வேலைக்கு செல்பவர்கள் காலையில் பூஜையை முடித்து விட்டு விளக்கை மலை ஏற்றி விட்டு பின்னர் வேலைக்கு தாராளமாக செல்லலாம். மீண்டும் மாலையில் இதேபோல் பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். வீட்டிலேயே இருப்பவர்கள் விரதம் முடியும் வரை முருகனுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.
 
வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம். குறிப்பாக கந்தசஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலை படிக்கலாம். மேலும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் விரதத்தின்போது சொல்ல வேண்டிய திருப்புகழை பாராயணம் செய்யலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்