மாலையில் பெருமாள் முருகன், சிவன்,கோவிலுக்கு சென்று தீபமேற்றி வழிபட வேண்டும். பெருமாள் தாயார் அபிஷேகம் பாருங்கள் மற்றும் சிவபெருமானுக்கும், உமையன்னைக்கும் அபிஷேக ஆராதனை பாருங்கள். வீட்டில் இருந்து கூட பூஜை செய்து தூப தீப நைவேத்தியங்களை செய்து சிறிய அளவில் முடிக்கலாம்.
இந்த விரதத்தால், விரைவில் திருமண யோகமும், செல்வச் செழிப்பும் உண்டாகும். பிறகு ஒரு ஸத் பிராம்மண தம்பதியினரை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு பாத பூஜை செய்து தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து தஷிணை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு போஜனம் அளிக்க வேண்டும்.
பெருமாள் தாயாரை திருமண கோலத்திலும் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் திருமணக்கோலத்திலும் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும். அன்று இரவு முழுவதும் ஸ்ரீ ராமாயணம் மகாபாரதம் சிவபுராணம், ஸ்கந்தசஷ்டி கவசம் போன்றவற்றை படிக்கலாம்.
வயதானவர்களுக்கு மட்டும் துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி இரவில் பால், பழம் உண்டு படுக்கையில் படுக்காமல் தரையில் துணி விரித்துப் படுக்க வேண்டும். மற்றவர்கள் முழு உபவாசம் இருக்க வேண்டும்.