ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி நடப்பவர்கள் தினமும் காகத்திற்கு உணவு வைப்பதால் ஏராளமான நற்பலன்களை அள்ளி தருவார் சனிபகவான். மேலும் காகத்திற்கு அன்னம் வைப்பதால் நம்முடைய பித்ருக்களின் ஆசியும் அருளும் கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிகை சனீஸ்வர பகவானின் வாகனமாகையால், காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் பகவான் தரும் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம்.
இறைவனின் பரிபூரண அருளையும் அன்பையும் பெறலாம். இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. இந்த பறவை யாருக்கும் செடுதல் செய்வதும் இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும் இந்த இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதின் அடிப்படையிலும் உணவிடும் பழக்கம் வந்தது. எப்படி இருந்தாலும் ஜீவகாருண்யம் மிக்க புண்ணியச் செயல் இது.
ஒருசிலர் எள் கலந்த சோற்றை காகத்திற்கு வைப்பார்கள் ஆனால் அப்படி வைக்காமல் அதனுடன் தயிர் கலந்து வைப்பதே மிகசிறந்த முறையாகும். தயிர் புதிதாக இருந்தால் மட்டுமே வைக்க வேண்டும். சில நேரங்களை நம்முடைய வீட்டில் உணவு சமைக்க முடியாது அப்படிபட்ட நேரங்களில் கடைகளில் வாங்கி, முதலில் காகத்திற்கு வைத்து விட்டு அதன் பின்னர் சாப்பிட வேண்டும்.