அப்படிப்பட்ட ஒரு கலவையில் ஒரு சிலையை வடிவமைத்திருப்பதில் இருந்தே சித்த முனிவர் போகர் ரசவாத கலவைகளில் கைதேர்ந்தவர் என்பது மட்டும் அல்ல தொலை தூரக் கண்ணோட்டத்தில் பின்னர் வர உள்ள காலங்களில் தோன்ற இருக்கும் முருக பக்தர்களுடைய உடல் நலனில் அளவுக்கு மீறிய நாட்டம் கொண்டு இருந்தார் எனவும் மிக உயர்வான தெய்வ நிலையை பெற்று இருந்தவர் எனவும் கூறப்படுகிறது.
முதல் நாள் இரவு நல்ல சந்தனத்தை அரைத்து பசை போல செய்து அதை சிலை மீது பூசி வைத்த பின் மறுநாள் எடுத்தால் அது அற்புதமான வேறொரு மருத்துவ குணம் கொண்டதாக வியாதிகளைத் தீர்க்கும் முறையில் அமைந்து விடுவதினால் அதன் மீது ஊற்றப்படும் தண்ணீரைக் குடித்தால் பல நாள்பட்ட நோய்களும் விலகுகின்றன. அதற்கு விஞ்ஞான காரணம் உள்ளது.