ஜாதக ரீதியான சில தோஷங்கள்- குறைகள், நீங்குவதற்காக ராமாயணத்தில் எந்தெந்த கட்டத்தைப் படிக்க வேண்டும் என்று பரமசிவன், பார்வதியிடம் கூறுவதாக அமைக்கப் பட்டிருக்கும் ஸ்லோகங்களும் அந்த நூல்களில் காணப்படுகின்றன.
சூரிய தசை தோஷம் செய்யக் கூடியதாக ஒருவனுக்கு இருக்குமேயானால், அவன் பரமசிவன், கங்கையை தனது தலையில் தாங்கிய கட்டத்தைப் படிக்க வேண்டும்.
சந்திர தசையில் குஜ அபவாத தோஷ பரிகாரம் என்பதற்கு விச்வாமித்திரர், ராம, லக்ஷ்மணர்களை அழைத்துக் கொண்டு போகும் கட்டங்களைப் படிக்க வேண்டும்.