ஆன்மாவை பற்றி கீதை கூறுவது என்ன...?

ஆன்மீகம் என்பது ஆன்மாவைப் பற்றிய ஞானமாகும், உடம்பினுக்குள்ளே குடிகொண்டிருக்கும் ஆன்மாவை, உலகியல் தொல்லைகளிலிருந்தும், பிறவி, பிணி, மரணம் என்ற தளைகளிலிருந்து மீட்க, ஆன்மாவாகிய தன்னை உணர்ந்து இறைவனோடு சேரும் நெறியாகும். ஆன்மாவை அறிந்து கொள்வதே தன்னை அறிதலாகும்.
உடம்புக்கு “மெய்” என்று பெயர். ஆனால் அந்த உடல் கொஞ்ச காலம் இருந்துவிட்டுப் பிணி, மூப்பு, சாவை அடையும் போது அது மறைந்து பொய்யாகி விடுகிறது. இப்படிப் பொய்யாகிவிடும் உடம்புக்கு ஏன் மெய்யென்று பெயர் வந்தது தெரியுமா?
 
உடம்புக்குள்ளே என்றும் அழிவற்றதும், ஆண்டவனுக்கு ஏகதேசமானதுமான ஆன்மா இருந்து கொண்டு, கருவி கரணங்களை இயக்குகின்றது.
 
ஆன்மாவின் உண்மை நிலையை அறிந்தால் தான் ஆண்டவனின் உண்மை நிலையை அறியலாம். ஆன்மாவை வினையில் இருந்தும்,  அழிவிலுருந்தும் மீட்பது எப்படி என்பதை அறிவதே ஆன்மிகம். பிரம்மத்தை அறிவது பிரம்ம ஞானம்.
 
ஆன்மிகம் = ஆன்மாவை மீட்பது. ஆன்மா உடம்பு அழிந்துவிட தனக்கு வேறொரு உடம்பு தேவைப்படுகிறது. அதனால் அதற்கு ஒரு புது உடம்பு தேவைப்படுகிறது. புது உடம்பு கிடைக்கவே, அதில் குடிபுகுந்து வாழ்ந்து அந்த உடம்பையும், நோய், மூப்பால் இழந்து விடுகிறது. இப்படி பல  உடம்புகளில் புகுந்து ஆன்மா உலக வாழ்வைத் தொடராமல் ஆன்மா தான்தானாக இருந்து கொள்ள அறிவதுவே ஆன்மிகம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்