உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதம் எவை தெரியுமா...?

Webdunia
சிவனும் நாராயணனும் சூரிய வடிவிலே துதிக்கப்படுவது வழக்கம். தெய்வங்களில் நாராயணனைப் போன்று சங்கு சக்கரம் தரித்தவர் சூரியபகவான். ஏழு குதிரைகள்  பூட்டப்பட்ட தேரில் ஏறி அவர் வலம் வருவதாகப் புராணங்கள் சொல்கின்றன. 

சூரியன் ஒளித் தேரில் பவனி வருகிறான். ஒளியின் ஏழு வண்ணங்களே ஏழு குதிரைகளாகச் சுட்டப்படுகின்றன. ரத சப்தமி நாளில் புனித நீராடி சூரியனை வழிபட  வேண்டும்.
 
சூரியன் வைணவத்தில் சூரிய நாராயணன் என்றும், சைவத்தில் சிவச் சூரியன் என்றும் கொண்டாடப்படுகிறார். ஆறுகள், காடுகள் போன்ற இயற்கை செழிக்க காரணமான சூரியனை விரதமிருந்து வழிபட்டால் வாழ்வில் அனைத்து நலங்களும் தடையின்றி வந்து சேரும்.
 
இந்த விரதம் இருந்து வழிபட உகந்த நாள் ரத சப்தமி. ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு  பிப்ரவரி 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரத சப்தமி வருகிறது. 
 
இந்த ரத சப்தமியன்று புண்ணிய ஆறுகள் மற்றும் தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராடி சூரிய பகவானை வழி்படுவர். உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது இந்த ரத சப்தமி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்