நவகிரக வழிபாட்டில் முக்கிய இடம்பெறும் தர்ப்பைப்புல் !!

Webdunia
நவகிரகங்களில் ஒன்றான கேதுவுக்கு உரிய சமித்து தர்ப்பை புல் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக, நவகிரக வழிபாட்டிலும் தர்ப்பைக்கு முக்கிய இடம் இருக்கிறது  என்பது மறுக்க முடியாத உண்மை.

தர்ப்பையின் நுனி பெருத்து இருந்தால் அது பெண் தர்ப்பை ஆகும். அடிப்பகுதி பெரிதாக இருந்தால் அது நபும்சக தர்ப்பை எனப்படும். அடிமுதல் நுனி வரை ஒரே  சமமாக இருந்தால் அது, ஆண் தர்ப்பை ஆகும். 
 
தர்ப்பை, நாணல், யாவைப் புல், அறுகு, நெற்புல், விழல்மற்ற தானியங்களின் புல், மருள்பட்டை, சவட்டை கோரைப்புல், கோதுமைப்புல் ஆகியன பத்து விதமான  தர்ப்பைகள் ஆகும்.
 
தர்ப்பையை கொய்யும் முறை: தர்ப்பையை அமாவாசையில் கொய்தால் ஒருமாதம் பயன்படுத்தலாம். பௌர்ணமியில் கொய்தால் ஒரு பட்சம் உபயோகிக்கலாம். பாத்திரபத மாதத்தில் (புரட்டாசி) கொய்தால் ஆறு மாதங்கள் பயன்படுத்தலாம். சிராவண மாதத்தில் (ஆவணி) கொய்தால் ஒரு வருடம் உபயோகிக்கலாம். ஆனால் சிரார்த்த காலத்தில் கொய்தால் அன்றே உபயோகிக்க வேண்டும்.
 
தர்ப்பையின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுவில் விஷ்ணுவும், முனையில் ஈசனும் இருப்பதாக புராணங்கள் சொல்கிறது. அநேக மகிமைகள் உள்ள இந்த தர்ப்பை புல்லிற்கு மருத்துவ குணங்களும் அதிகம் இருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்