டிசம்பர் மாத ராசிப் பலன்கள் - மிதுனம்

புதன், 30 நவம்பர் 2016 (20:03 IST)
உலகம் ஒரு சந்தை மடம் என்பதை உணர்ந்த நீங்கள் அதிகம் ஆசைப்பட மாட்டீர்கள். சனிபகவான் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். வேற்றுமதம், மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு தடைப்பட்ட வேலைகளெல்லாம் விரைந்து முடிப்பீர்கள். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு விலகிச் சென்ற உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வீடு கட்டுவது, வாங்குவது லாபகரமாக முடிவடையும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும்.

15-ந் தேதி வரை சூரியன் 6-ல் அமர்வதால் அடிமனதிலிருந்து வந்த குற்ற உணர்வுகள் நீங்கும். வழக்குகள் சாதகமாகும். அரசு காரியங்களும் நல்ல விதத்தில் முடியும். 5-ந் தேதி வரை செவ்வாய் 8-ம் இடத்தில் மறைந்திருப்பதால் மனஉளைச்சல், முன்கோபம், வீண் அலைச்சல், படபடப்பு வந்துச் செல்லும். ஆனால் 6-ந் தேதி முதல் செவ்வாய் 9-ம் வீட்டில் நுழைவதால் நிம்மதி உண்டாகும். சகோதரங்கள் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்வார்கள். புறநகருக்கு அருகில் வீட்டு மனை வாங்குவீர்கள். உங்கள் ரசனைப்படியும் மனை அமையும். 4-ல் குரு நிற்பதால் தாயாரின் உடல் நிலை லேசாக பாதிக்கும். வாகனச் செலவும் அதிகமாகும். வயிற்று வலி, தலை வலி வந்து நீங்கும்.

கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். ராகு 3-ம் வீட்டில் தொடர்வதால் வியாபாரம் செழிக்கும். பழைய சரக்குகளும் விற்றுத் தீரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்களும் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள்.

உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் சொல்லி வைப்பார்கள். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சகிப்புத் தன்மையாலும், கடின உழைப்பாலும் முதலிடம் பிடிக்கும் மாதமிது.

வெப்துனியாவைப் படிக்கவும்