முற்பிறவியில் நாம் செய்த வினைகளின் காரணமாக, இந்தப் பிறவியில் பல தொல்லைகளை அனுபவிக்கிறோம் அதில் ஒன்று தான் கடன் பிரச்சனை. இந்த கடன் பிரச்சனை விரைவில் தீர மூன்று பெளர்ணமி தினங்கள் குலதெய்வ கோவிலிற்கு சென்று மனமுருகி குலதெய்வத்தை வேண்டி, முறையாக வழிபட்டு வந்தால் கடன் தொல்லைகள் அனைத்தும் விலகும்.
வீட்டில் குலதெய்வ படம் வைத்துள்ளவர்கள் அதன் முன்பாக ஐந்துமுக விளக்கில் நெயிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு அவரவர் வழக்கம் படி குலதெயவத்திற்கு படையல் இட்டு வழிபட்டு, கடன் பிரச்சனைகள் முழுவதுமாக நீங்க வேண்டும் என்று மனமுருகி குலதெய்வத்திடம் பிரார்த்தனை செய்யவேண்டும்.