ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்ச நேயர். அறிவு, உடல், அறிவு, வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பற்றவர் ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆஞ்சநேயர் ஆவார். ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். புதன், வியாழன், சனி இம்மூன்று கிழமைகளில் வழிபடுவதால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும்.