விநாயகருக்கு அருகம் புல் கொண்டு வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் !!

அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால் கூட உடனே துளிர்விடும். 

அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்.
 
கணபதியின் பூஜைக்கு உரியதானது அருகம்புல். தூர்வை, மேகாரி, பதம், மூதண்டம் என பல பெயர்களால் சிறப்பிக்கப்படும் அருகம்புல் கணநாதருக்கு மட்டும் அல்ல, மூலிகையாக எடுத்துக்கொண்டால் நமக்கும் நலம் பயப்பவை தான். 
 
ஆன்மீகத்துடன் மருத்துவத்தைக் கலந்தே நம் முன்னோர்கள் சொல்லிவந்தனர். அருகம்புல் முழுத்தாவரமும் இனிப்புசுவையும், குளிர்ச்சித்தன்மையும் உடையது. உடல் வெப்பத்தை அகற்றும். சிறுநீர் பெருக்கும். குடல் புண்களை ஆற்றும். 
 
ரத்தத்தை தூய்மையாக்கும் மற்றும் உடலை பலப்படுத்தும், அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட அருகம்புல்லை செவ்வாய்கிழமையன்று விநாயகருக்கு சாற்றி வணங்க தீராத கடன்பிரச்சினையும் தீரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்