பிரார்த்தனைகள் பலிக்கும் அந்த நேரத்தை பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்வார்கள். பிரம்ம முகூர்த்தம் என்பது எல்லாமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வீட்டில் வேலை செய்ய வேண்டும். பின்பு குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும்.
ப்ரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம். மந்திர உபாசனைக்கு காலையில் ப்ரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.