சிறப்பு மிக்க மாதத்தில் வருகின்ற ஒரு அற்புதமான நாள் தான் "ஆடி சங்கடஹர சதுர்த்தி" தினம். அந்த தினத்தன்று விநாயகப் பெருமானுக்கு கடைபிடிக்க வேண்டிய விரத முறைகளும், அதனால் உண்டாகும் பலன்கள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஆடி சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்கவேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் உப்பு சேர்க்காத உணவு அல்லது பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம்.
ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் காரிய தடை, தாமதங்கள் போன்றவை நீங்கும். புதிதாக மேற்கொள்கின்ற முயற்சிகள் அனைத்திலும் வெற்றியும், நீங்கள் விரும்பிய பலன்களும் உண்டாகும்.
பெண்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் இனிதே நடைபெறும். குழந்தைகள் கல்வியில் சிறப்பான தேர்ச்சி மற்றும் வெற்றியும் பெறுவார்கள். நீண்டகாலமாக வேலை தேடி அலைந்தவர்கள் சீக்கிரத்தில் நல்ல வேலை கிடைக்கப் பெறுவார்கள். பணியில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் எதிர்பார்த்த இடங்களுக்கு பணியிட மாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருமானம் பெருகும்.