சிவாலயங்களில், பிராகாரத்தை சுற்றி வரும்போது, காலபைரவருக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கும். தேய்பிறை அஷ்டமி, பைரவருக்கு உகந்த நாள்.
சில ஆலயங்களில், ராகுகாலவேளையில், தேய்பிறை அஷ்டமியின் போது பைரவருக்கு விசேஷ பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெறும். பைரவரை தரிசிப்பதே சிறப்பு. தேய்பிறை அஷ்டமியின் போது பைரவரை வணங்குவது இன்னும் விசேஷம்.
இன்றைய தினம் தேய்பிறை அஷ்டமி. அவருக்கு உரிய நன்னாளில், பைரவரை வணங்கிட பயமெல்லாம் விலகிடும். இந்த நாளில், பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வணங்கி வழிபடுவது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும்.
சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் படியளக்கும் இனிய திருநாள், மார்கழி மாதம் வருகின்ற அஷ்டமி ஆகும். இந்த மார்கழி அஷ்டமி அன்று சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளப்பதால் அன்றைய தினம் இறைவன் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும். வளர்ச்சியும் கூடும். அன்றைய தினம் அன்னதான வைபவங்களை நாம் செய்தால் புண்ணியமும் நமக்கு வந்து சேரும். பொருளாதார வசதியும் பெருகும்.