எந்த தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா...?
இந்து மதத்தில் எந்தெந்த செய்களில் ஈடுபட்டால் கர்மாவிற்கு புண்ணியம் சேரும், மற்றும் பாவம் சேரும் என்பது பற்றி பல விஷயங்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மேலும், முற்காலத்தில் இருந்தே, தனது தலைமுறைகளுக்கு சொத்து சேர்ப்பதை விட புண்ணியம் சேர்ப்பது தான் அவசியம் என கருதினர்.
* அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும்.
* வஸ்திர தானம் -ஆயுளை விருத்தி செய்யும்.
* பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்.
* கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்.