சமந்தா கால்ஷீட் - கட்டையை போட்டாரா சித்தார்த்...?

வெள்ளி, 16 ஆகஸ்ட் 2013 (11:34 IST)
சிம்புவை வச்சு படம் பண்றேன். அது ஒண்ணுதான் முடிவாகியிருக்கு. அதுக்குள்ள படத்துக்கு இதுதான் பேரு, இவங்கதான் ஹீரோயின்னு ஏம்பா இஷ்டத்துக்கு அடிச்சு விடுறீங்க என்று மீடியாவிடம் ஏற்கனவே சலித்துக் கொண்டுவிட்டார் பாண்டிராஜ்.
FILE

ஆனாலும் காற்றுவாக்கில உலவுகிற செய்தியை அவரது காதுக்கு கொண்டு செல்வது நமது கடமையில்லையா.

FILE
பாண்டிராஜ் சிம்பு இணையும் படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க சமந்தாவை டிக் செய்திருக்கிறார்கள். சமந்தாவுக்கும் ஓகேதானாம்.

இந்த நேரத்தில் நடுவில் புகுந்த சமந்தாவின் தற்போதைய பெஸ்ட் ப்ரெண்ட் சித்தார்த் கட்டையை போட்டிருக்கிறார்.

யாருடன் வேணுமானாலும் ஜோடியாக நடி, சிம்பு மட்டும் வேணாம் என அவர் சமந்தாவை கேட்டுக் கொண்டதாகவும், சித்தார்த் வாக்கே சிவன் வாக்கு என்றிருக்கும் சமந்தாவும் படத்தில் நடிக்க மறுத்ததாகவும் கொஞ்சம் பலமாகவே கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது.

உண்மையா...? பாண்டிராஜ் சார் நீங்க என்ன சொல்றீங்க?

வெப்துனியாவைப் படிக்கவும்