ஜோர்டான் நாட்டு ராணிக்கு தலைவணங்கிய போப்

திங்கள், 2 செப்டம்பர் 2013 (18:20 IST)
FILE
வாடிகனில் ஜோர்டான் நாட்டு ராணிக்கு போப் பிரான்சிஸ் தலைவணங்கி வணக்கம் செலுத்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

வாடிகனிற்கு பயணம் மேற்கொண்ட ஜோர்டான் நாட்டு ராணி ரனியா தனது கணவர் மன்னர் 2ம் அப்துல்லாவுடன் போப் பிரான்சிஸ்ஸை சந்திக்கவந்திருந்தனர்.

அப்போது வழக்கத்திற்கு மாறாக தலைவணங்கி ராணிக்கு வணக்கம் செலுத்தி போப் அவரை வரவேற்றார்.

இதுகுறித்து வாடிகன் சிட்டி அதிகாரி ஒருவர் கூறுகையில், போப் பிரான்சிஸ் மிகவும் எளிமையானவர், மரபுகள் குறித்துக் கவலைப்படாதவர்.

போப்பாவதற்கு முன்பு எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் இப்போதும் சாமானியராக இருக்கிறார் என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்புதான் செயின் பீட்டர் பசிலிகாவுக்கு வந்திருந்த இளம் இத்தாலிய யாத்ரீகர்களை சந்தித்த போப், அவர்களுடன் சேர்ந்து நின்று செல்போனில் படம் பிடிக்க போஸ் கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

19ம் நூற்றாண்டு வரை போப்களை யார் சந்தித்தாலும் அவரது செருப்புகளுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்ற மரபு இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்