டூ மினிட்ஸ் நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்து டூ இயர்ஸ் ஆகிடுச்சி - அமிதாப் டூ லேட் விளக்கம்

வியாழன், 4 ஜூன் 2015 (10:31 IST)
மேகி நூடுல்ஸில் அனுமதிக்க அளவைவிட 17 மடங்கு அதிகம் மோனோசோடியம் குளூட்டோமேட் உப்பு இருப்பதாக கண்டறியப்பட்டு உத்திர பிரதேசம் மாநிலத்தில் மேகி தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிற மாநிலங்களும் மேகியின் மீது கவனத்தை திருப்பியுள்ளன. மேகி விளம்பரத்தில் நடித்தவர்கள் (அமிதாப்பச்சன், மாதுரி தீட்ஷித், ப்ரீத்தி ஜிந்தா) மீது வழக்கு தொடரும்படி பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்குப் பிறகு அமிதாப்பச்சன் இது குறித்து விளக்கமளித்தார்.
 
நான் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் தோன்றுவதை நிறுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, இதுவரை எந்தவித நோட்டீசும் வரவில்லை. அப்படி வரும் பட்சத்தில் அதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக இருப்பதுடன், உரிய ஒத்துழைப்பு வழங்கவும் தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
 
அமிதாப்பச்சன் நடித்து இரண்டு வருடங்களாகியிருக்கலாம். ஆனால், அந்த விளம்பரங்கள் இன்றும் சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டுதான் இருக்கின்றன. மேலும், ஒப்பந்தத்தில் இத்தனை ஆண்டுகள் பயன்படுத்தலாம் என்று அமிதாப்பச்சனும் கையெழுத்திட்டிருப்பார். அதன்படியே விளம்பரத்தை அந்நிறுவனம் ஒளிபரப்புகிறது. 
 
மேகி விளம்பரத்தில் நடித்ததற்காக அமிதாப் மற்றும் பிறர் மீது வழக்கு பாயும் எனில், அவ்விளம்பரங்களை ஒளிபரப்பி கோடிக்கணக்கில் சம்பாதித்த தொலைக்காட்சி நிறுவனங்களும் குற்றவாளிகள்தானே? அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா? 

வெப்துனியாவைப் படிக்கவும்