வெக்காளியம்மன் கோயிலுக்கு தங்கத்தேர்

திங்கள், 29 டிசம்பர் 2008 (11:06 IST)
வெக்காளியம்மன் கோயில் தங்கத்தேர் திருப்பணிக்காக ரூ.40 லட்சத்தில் 3.3 கிலோ தங்கத்தை சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இருந்து வாங்க அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் தங்கத்தேர் செய்வதற்கு மொத்தம் 10.6 கிலோ தங்கம் தேவைப்பட்டது. கோயில் இருப்பில் 7.3 கிலோ தங்கம் உள்ளது.

மீதி 3.3 கிலோ தங்கத்தை சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இருந்து விலைக்கு வாங்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு அறநிலையத்துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து ரூ.40 லட்சத்துக்கு சமயபுரம் கோயிலில் இன்று 3.3 கிலோ தங்க‌ம் வாங்கப்பட உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்