சகோதரத்துவம் கொண்ட மீரன் தாதார் த‌ர்கா

திங்கள், 22 செப்டம்பர் 2008 (12:49 IST)
இறைவனின் நீதிமன்றத்தில் இந்து என்றோ, முஸ்லிம் என்றோ சீக்கியர் அல்லது கிறிஸ்துவர் என்றோ எந்த பேதமும் இல்லை. இந்த வார புனிதப் பயணத்தில் உங்களை அப்படிப்பட்ட மீரன் தாதார் என்ற புனித தளத்திற்குக் கொண்டு செல்லப்போகிறோம்.

WD
வடக்கு குஜராத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் பெயர் உனாவா. இந்த விவசாயத்தைச் சார்ந்த கிராமத்தின் பெயர் மிகவும் புகழ் பெற்றது என்றால் அதற்குக் காரணம் அங்குள்ள ஹஸ்ரத் மீரான் சையத் அலி தாதாரத‌ர்காதா‌ன்.

சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த புனித இடம் அ‌ந்கிராமத்தி‌ன் துவக்கமாகவே உள்ளது. இங்கு முஸ்லிம் மக்கள் மட்டுமே வருவதில்லை. பல இந்துக்களும் வந்து தங்களது பிரார்த்தனைகளை செய்கின்றனர்.

இந்த புனித தலம் மிகப்பெரிய அதிசயமாக விளங்குகிறது. ஆவிகளின் பிடியில் சிக்கியவர்கள், தீர்க்க முடியாத நோய்களைக் கொண்டவர்களும் இங்கு வருகின்றனர். இந்த இடத்திற்குள் நுழைந்ததும், அந்த புனிதத் தலத்தின் தாக்கம் நம்மை ஆக்ரமிப்பதை நம்மால் உணர முடிகிறது.

WD
இந்த கோயிலைப் பற்றி சொல்வது மட்டும் ஆச்சரியமாக இருப்பதில்லை. இந்த கோயிலின் வரலாறும் கூட மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இங்கு வாழ்ந்த இஸ்லாமிய துறவி சையத் அலிக்கு, ஹிந்தி கவிஞர் ஷாஹ் சோரத் என்பவர் மீரான் தாதார் என்று பெயரிட்டார். மீரான் என்றால் மனித நேயத்தை நேசிப்பவர் என்றும், தாதார் என்றால் தொண்டு செய்பவர் என்றும் அர்த்தம். அன்றில் இருந்து சையத் அலி மீரன் தாதார் என்று அழைக்கப்பட்டார்.

அஹமதாபாத்தில் கான்பூர் நகரத்தில் 879ம் ஆண்டு (இஸ்லாமிய நாட்காட்டியில்) 29ம் தேதி ரம்ஜான் மாதத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே இறை சக்தியின் ஆசியைப் பெற்ற ஹஸ்ரத் சையத் அலி மீரன் தாதார் தனிச் சிறப்பைப் பெற்றிருந்தார். அவர் புகாராவில் இருந்து இந்தியாவிற்கு வந்தார்.

இந்தியாவில் உனாவா கிராமத்தில் தங்கியிருந்து 898ம் ஆண்டு 29ம் தேதி சஃபர் மாதத்தில் இயற்கை எய்தினார். அன்றில் இருந்து அவரது சமாதி அமைந்த இடம் புனித தளமாகக் கருதப்பட்டு ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

பிரார்த்தனையும், சிகிச்சையும்!

WD
உடல் நோய் மற்றும் மன நோயில் இருந்து விடுதலை பெற வேண்டி பலரும் இந்த புனித இடத்திற்கு வருகின்றனர். இந்த கோயிலில் நிர்வாகத்தில் ஈடுபட்டிருக்கும் சையத் சோட்டு மியான் என்பவர் நம்மிடம் கூறுகையில், இந்த புனித தளத்தைப் பற்றி அறிந்த குஜராத் அரசு, தற்போது ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் மனநல மருத்துவர்களை அனுப்பி இங்குள்ள மனநோயாளிகளுக்கு சிகிச்கை அளிக்க வழி செய்துள்ளது. இந்த சிகிச்சைக்காக அவர்கள் எந்த கட்டணமும் அளிக்கத் தேவையில்லை என்று கூறினார்.

எப்படிச் செல்வது!

விமான மார்கம் : அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து அருகாமையில் உள்ளது.

ரயில் மார்கம் : உஞ்சாஹ் மற்றும் மேஹ்சான ரயில் நிலையங்களில் இருந்து முறையே 5 கி.மீ. மற்றும் 19 கிமீ. தொலைவில் அமைந்துள்ளது.

சாலை மார்கம் : டெல்லி - பாலன்புர் - அஹமதாபாத் நெடுஞ்சாலையில் உனாவா கிராமம் உள்ளது. பாலன்புரில் இருந்து 55 கி.மீட்டரும், அஹமதாபாத்தில் இருந்து 95 கி.மீட்டரும் தொலைவில் உனாவா உள்ளது.