தானியங்களை உண்பதற்கு முன்பு ஒவ்வொரு கிளியும் தனது தலையை ஹனுமன் சிலையை நோக்கித் திருப்பி வழிபடுகிறது. பிறகு மேற்குப் புறமாகத் திரும்பி தானியத்தைக் கொத்தித் தின்கிறது. பச்சைக் கிளிகளின் இந்தப் பக்தியைக் கண்டு அனைவரும் வியக்கின்றனர். பச்சைக் கிளிகளின் வருகை நாள்தோறும் அதிகரித்து வருவதால், 3,000 சதுர அடிபரப்பளவுள்ள கான்கிரீட் கூரையை சில பக்தர்களின் உதவியுடன் கோயில் நிர்வாகம் அமைத்துள்ளது. தினமும் காலை 5.30 முதல் 6.00 மணி வரையும், மாலை4 முதல் 5 மணி வரையும் கான்கிரீட் தளத்தின் மீது தானியங்கள் பரப்பப்படுகின்றன. சுமார் 1 மணி நேரத்தில் தானியங்கள் முழுவதையும் கிளிகள் தின்று விடுவதாக, கோயில் பணியாளர் ரமேஷ் அகர்வால் தெரிவித்தார்.
கோயிலிற்கு வரும் பக்தர்கள் வழிபாட்டிற்குப் பிறகு பிரசாதம் பெற்றுச் சாப்பிடும் அதே நேரத்தில் பச்சைக் கிளிகளும் தானியத்தை உண்ணத் துவங்குவது, ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வாக வியக்க வைக்கிறது. பச்சைக் கிளிகளின் பக்தியைக் காண நீங்கள் விரும்புவீர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். எங்களுக்கு எழுதுங்கள்.