தாதாஜி தூனிவாலே

ஞாயிறு, 25 மே 2008 (12:56 IST)
webdunia photoWD
ஷீரடி சாய்பாபாவைப் போன்று மிக உன்னதமான துறவியாக வாழ்ந்தவர் தாதாஜி தூனிவாலே. ஆன்மிக நெறியுடன் வாழ்ந்த இவரை சுவாமி கேஷ்வானந்த்ஜி மஹாராஜ் என்று பக்தர்கள் அன்போடு அழைத்தனர்.

இவர் எப்போதும் அக்னி குண்டத்தின் முன்பு அமர்ந்தபடியே இறைவனை வழிபடுவார். அக்னி குண்டத்தை ஹிந்தியில் தூனி என்று சொல்லுவார்கள். தாதா என்றால் தாத்தா என்று அர்த்தம். எனவே தான் இவர் தாதா தூனிவாலே என்று அழைக்கப்பட்டார். இவர் இடைவிடாது சிவனை பிரார்த்தித்தபடி இருந்தார்.

இவரது உண்மையான வரலாறு கிடைக்கவில்லை. எனினும் இவரைப் பற்றிய பலச் செய்திகள் வழக்கத்தில் உள்ளன.

இவரது சமாதியை ஒட்டி, தாதாஜியின் நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் குரு பூர்ணிமா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த நாளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் இக்கோயிலுக்கு வந்து தாதாஜியை வணங்கிச் செல்வார்கள்.

தாதாஜியின் வழிபாட்டுத் தலங்கள் இந்தியாவில் 27 இடங்களில் உள்ளன.

webdunia photoWD
இவர் வாழ்ந்த காலத்தில் அக்னி குண்டத்தில் தொடர்ந்து தீ எரிந்து கொண்டே இருக்கும். இவர் 1930ஆம் ஆண்டில் சமாதி அடைந்தார்.

இவரது சமாதி கந்த்வா நகரத்தில் அமைந்துள்ளது. கந்த்வா ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இவரது சமாதியை அடையலாம்.

சின்ன தாதாஜி
(சுவாமி ஹரிஹரனந்த்ஜி)

ராஜஸ்தான் மாநிலம் தித்வா கிராமத்தைச் சேர்ந்த பணக்காரரான பன்வர்லால் என்பவர் தாதாஜியை சந்திப்பதற்காக வந்தார்.

தாதாஜியை பார்த்து அவரது ஆசியைப் பெற்ற பின்னர் அவர் மீண்டும் அவரது ஊருக்குச் செல்லவேயில்லை. தாதாஜியுடனேயே இருந்துவிட்டார். முழு மனதுடன் தாதாஜிக்கு சேவையாற்றி வந்தார்.

webdunia photoWD
இவர் விஷ்ணுவின் பக்தர். இயற்கையில் இவர் மிகவும் அமைதியானவர். இவரை சின்ன தாதாஜி என்றே பக்தர்கள் அழைத்தனர். தாதாஜி சமாதி அடைந்த பிறகு அவரது இடத்தில் இருந்து ஆன்மிகப் பணிகளை சின்ன தாதாஜியே செய்து வந்தார்.

இவர் 1942ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு அலஹாபாத்தில் சமாதி அடைந்தார்.

எப்படி செல்வது : கந்த்வா கிராமம் ரயில் மற்றும் சாலை வழியாகச் செல்லும் வசதி கொண்டது. கந்த்வா ரயில் அல்லது பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த தலம் அமைந்துள்ளது. இந்தூர் விமான நிலையத்தில் இருந்து 140 கி.மீ. தூரத்தில் உள்ளது.