துறவி சிங்காஜியின் கோயில!

திங்கள், 19 மே 2008 (11:48 IST)
webdunia photoWD
இந்த வார புனிதப் பயணம் தொடரில், துறவி சிங்காஜி மஹாராஜ் கோயிலை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

சிங்கஜி மஹாராஜ் கோயில், மத்தியப்பிரதேசத்தின் கந்தாவாவில் இருந்து 35 கி.மீ. தொலைவில் இருக்கும் பிப்லியா என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது.

குவாலி சமூகத்தில் பிறந்த சிங்காஜி, எளிமையாகவும், நேர்மையானவராகவும் வாழ்ந்தார். மன்ரங் சுவாமிகளின் சொற்பொழிவை கேட்ட சிங்காஜியின் வாழ்க்கைப் பாதை ஆன்மீக வழியில் மாறியது.

துற‌வியான க‌பீ‌ரி‌ன் ‌சீடரான இவ‌ர், உருவமற்ற வழிபாட்டை மேற்கொண்ட சிங்காஜி, கோயில்களுக்குச் செல்வதையும், விரதங்கள் மேற்கொள்வதையும் ஏற்கவில்லை. தூய உள்ளங்களில் இறைவன் வாழ்வதாகவே அவர் நம்பினார். ஒவ்வொருவரும் தங்களை அறிந்து கொள்வதே இறைவனை சேர்வதற்கான வழியாகும் என்று கூறினார். இவரது காலத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டார்.

webdunia photoWD
இவர் வாழ்நாள் முழுவதும் எந்த கோயிலையும் எழுப்பவில்லை. நாம் நல்ல வழியில் சென்றால் எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் நம்மை ஆசிர்வதிப்பார் என்று அவர் கூறுவார்.

webdunia photoWD
சிங்காஜியின் குருவின் சொற்படி, சுக்லபட்சத்தின் 9வது நாளில் சிங்காஜி தனது உடலை துறந்தார். சிங்காஜி உடலைத் துறந்து 6 மாதங்கள் கழித்து, பக்தரின் கனவில் வந்து தனது விருப்பத்தைக் கூறினார். அதாவது தனது உடலை அமர்ந்த நிலையில் புதைக்க வேண்டும் என்பதுதான் அது. அதன்படி, சிங்காஜியின் உடல் அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டது.

நர்மதை அணைத் திட்டம் இந்த கோயில் அமைந்துள்ள இடத்தில் இருந்துதான் துவங்குகிறது. இந்த திட்டத்தால் கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக பெரிய சுவர் ஒன்றும் கோயிலைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளது. மேலும் சிறிது தூரம் தள்ளி புதிய கோயில் ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது.

கோயிலின் சீரமைப்பு பணிகளுக்காக கோயிலுக்குள் இருந்த சிங்காஜியின் பாதச் சுவடுகள் பக்தர்கள் பூஜிப்பதற்கு வசதியாக வேறு இடத்திற்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள ஸ்வஸ்திக் கண்ணாடி உருவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பெளர்ணமி நாட்கள் இங்கு விசேஷமாகும்.

webdunia photoWD
எப்படி செல்வது :

சாலை மார்கம் : கந்தாவாவில் இருந்து 30 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது.

ரயில் மார்கம் : கந்தாவாவில் இருந்து பீட் ரயில் நிலையத்திற்கு ரயில் மார்கமாகவும் செல்லலாம். பீட் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தூரம் தான்.